மாவட்ட செய்திகள் நவம்பர் 29,2022 | 13:33 IST
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கடைவீதி பகுதியை சேர்ந்தவர் பாத்திமா கவி என்ற 74 வயது மூதாட்டி. 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கணவர் இறந்து விட்ட நிலையில் மூதாட்டி தனியாக பழமையான இரண்டு அடுக்கு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் அருகில் உள்ள குப்பை தொட்டியில் குப்பையை போட்டுவிட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது வீடு மளமளவென சரிந்து விழுந்ததில் உள்ளே மூத்தாடி மாட்டிக் கொண்டார். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் கட்டிடத்தில் சிக்கிய முதாட்டியை மீட்க போராடினர். 5 மணி நேர போராட்டத்திற்கு பின் மூதாட்டியை சடலமாக மீட்டனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர். மூதாட்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்து