மாவட்ட செய்திகள் நவம்பர் 29,2022 | 15:37 IST
மயிலாடுதுறை மாவட்டம் காவேரி பூம்பட்டினம் ஊராட்சியில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு துவங்க வேண்டிய முகாம் மதியம் 12.30 மணிவரை அதிகாரிகள் வராததால் துவங்கவில்லை முகாமிற்கு வந்தவர்கள் 3 மணி நேரம் அதிகாரிகளுகாக காத்திருந்தனர். சிலர் சேரில் அமர்ந்தபடியே .தூங்கினர். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமையில் 3 மணி நேரம் லேட்டாக கூட்டம் மதியம் தொடங்கியது. முகாமில் பங்கேற்றவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்படாததால் மக்கள் சோர்வடைந்தனர்.
வாசகர் கருத்து