மாவட்ட செய்திகள் நவம்பர் 29,2022 | 00:00 IST
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தஞ்சாக்கூரில் ஜெயம்பெருமாள், தவக்கோல சிவன், ஜெகதீஸ்வரர், பாலசுப்பிரமணியர், 18 சித்தர்கள் ஆகியோருக்கு ஒரே வளாகத்தில் தனித்தனியாக கோயில்கள் கட்டி கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. முதல் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு சுவாமிகளுக்கு அதிகாலை சிறப்பு திருமஞ்சனம் செய்து 11 வகையான பொருட்களால் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் பா.ஜ. தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் பாலசுப்பிரமணியசாமி, நிர்வாகிகள் சகலகுருநாதன், சக்திவேல் செய்தனர்.
வாசகர் கருத்து