மாவட்ட செய்திகள் நவம்பர் 29,2022 | 19:20 IST
கேரள கோவில்களின் கொடி மரத்துக்கு அருகில் கல் குத்துவிளக்குகளை பார்க்க முடியும். ஆரம்ப காலத்தில் கையினால் உளியைக் கொண்டு செதுக்கப்பட்ட இவ்விளக்குகள் தற்போது "லேத்" இயந்திரங்களைக் கொண்டு கடைந்து கலை நுணுக்கத்துடன் உருவாக்கப்படுகிறது. கோவை சங்கனூரில் செய்யப்படும் இவ்விளக்குகளுக்கு உள்ளூர் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள கோவில்களில் நல்ல வரவேற்பு உள்ளது. கோவில்கள் தவிர கல் குத்துவிளக்கை பங்களா வீடுகளின் நுழைவாயில், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், தோட்டம், பூங்கா உள்ளிட்ட இடங்களில் வைக்கத் தொடங்கியுள்ளனர். இதற்கு காரணம் இதன் கலைநயம் மிக்க தோற்றமே. எதிர்மறை எண்ணங்களை விலக்கி நேர்மறை எண்ணங்களை உருவாக்கும்.
வாசகர் கருத்து