மாவட்ட செய்திகள் நவம்பர் 29,2022 | 19:24 IST
ரசீது இல்லாமல் பொருள்களை விற்கும் சிறு வணிகர்களுக்கு வணிகவரித் துறை அதிகாரிகள் ₹20,000 அபராதம் விதிக்கின்றனர். இதற்கு வணிகர்களுக்கான சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்து, டெஸ்ட் பர்ச்சேஸ் என்ற அந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், அதன் தலைவர் விக்கிரமராஜா வணிக வரி இணை ஆணையரிடம் மனு அளித்தார். சென்னை, பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை வணிக வரி துறை அலுவலகம் செல்லும் முன் கவன ஈர்ப்பு நடத்தினார்.
வாசகர் கருத்து