அரசியல் நவம்பர் 30,2022 | 09:02 IST
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சி தலைவராக இருப்பவர் முனவர்ஜான். துணை தலைவர் பசீர் அகமது. இருவரும் திமுகவை சேர்ந்தவர்கள். முனவர்ஜான் தனக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என, பசீர் அகமது கட்சி நிர்வாகிகளிடம் வெளிப்படையாக தெரிவித்தார். சமீபத்தில் சுயேட்சை கவுன்சிலர் ஒருவரிடம்,முனவர்ஜான் பற்றி தரக்குறைவாக பேசியுள்ளார். தகாத வார்த்தைகளால் பசீர் அகமது பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. "அவள் பின்னாடியே எல்லோரும் போங்க" என ஆரம்பித்து, பார்தா அணிவது வரை விமர்சித்துள்ளார்.
வாசகர் கருத்து