பொது நவம்பர் 30,2022 | 13:55 IST
காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளையின் 4 நிர்வாக உறுப்பினர்களில் முதல் தமிழராக வெங்கட்ரமண கனபாடி தேர்வானார். கோயிலில் தமிழகர்களின் இசை கேட்க வேண்டும் என பக்தர்கள் அவரிடம் கோரிக்கை வைத்தனர். காசி தமிழ் சங்கமத்தை கடந்த 19ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் இசைஞாணி இளையாராஜா பங்கேற்றார். அவரிடமே இசை நிகழ்ச்சி நடந்த அறக்கட்டளை அழைப்பு விடுத்தது. இளையராஜா இந்த வாய்ப்பை உடனே ஏற்றுக்கொண்டார். டிசம்பர் 15ம் தேதி காசியில் கச்சேரி நடத்துகிறார் இளையராஜா. “புத்தர், ராமகிருஷ்ண பரம்ஹம்சர், கபீர்தாசர் என எத்தனையோ மாகன்களும் சித்தர்களும் தரிசித்த இடம் காசி. அத்தனை பெருமை கொண்ட காசி கோயில் புதுப்பித்து முதல் முறையாக இசை நிகழ்ச்சி நடத்த எனக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. என இசையை கேட்க சிவபெருமானே என்னை அழைத்தது போல் உணர்கிறேன் நான் இசையமைத்த பக்தி பாடல்களை காசியில் பாட போகிறேன்” என இளையராஜா மகிழ்ச்சியாக தெரிவித்தார். இசை நிகழ்ச்சி நடத்த கோயில் நிர்வாகத்திடம், ஒரு ரூபாய் கட்டணம் கூட இளையராஜா பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து: