அரசியல் டிசம்பர் 01,2022 | 12:42 IST
ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து இந்தியா வந்த பழங்குடியினர், குஜராத்தின் கிர் மாவட்டம், ஜாம்பூர் கிராமத்தில் பல ஆண்டுகளாக வசிக்கின்றனர். இந்த கிராமத்தை 'மினி ஆப்பிரிக்கா' என்றும் அழைக்கின்றனர். முதல் முறையாக ஆப்ரிக்க பழங்குடியினருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டு, ஓட்டு அளிக்கும் உரிமையும் தரப்பட்டுள்ளது. 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இப்போது நடக்கும் குஜராத் தேர்தலில் முதல் முறையாக ஓட்டு போடுகின்றனர். உள்ளனர். இதற்காக ஜாம்பூர் கிராமத்தில் சிறப்பு வாக்கு சாவடியும் அமைக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக ஓட்டு போடு உரிமை கிடைத்துள்ளதால் விருந்து வைத்தும், நடனமாடியும் விழா போல கொண்டாடினர்.
வாசகர் கருத்து