சம்பவம் டிசம்பர் 01,2022 | 00:00 IST
பள்ளிகூட வளாகத்தில் குடித்துவிட்டு சேட்டை செய்யும் இளைஞர்கள் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள வீரங்கிபுரம் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். பள்ளி மூடி இருக்கும் சமயங்களில் அப்பகுதி இளைஞர்கள் காம்பவுண்டுக்குள் நுழைந்து மது குடிப்பது சமீப காலமாக அதிகரித்துள்ளது. போதை தலைக்கேறிய இளைஞர்களில் சிலர் கெத்து காட்டுகிறேன் பார் என, பாறாங்கற்களை கொண்டு பள்ளியின் இரும்பு கதவு, கைப்பிடி சுவர்களை உடைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
வாசகர் கருத்து