மாவட்ட செய்திகள் டிசம்பர் 01,2022 | 17:28 IST
சென்னை அடுத்துள்ள, கூடுவாஞ்சேரியில், சென்னை-திருச்சி நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போலீஸ்காரர் கார்த்திகேயன் மீது, டூ வீலர் மோதியது. இந்த விபத்தில் டூ வீலரை ஓட்டிவந்த, இஞ்சினியரிங் கல்லூரி மாணவர் வெங்கட் மற்றும் சூர்யா பலத்த காயம் அடைந்தனர். மூன்று பேருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சாலையை கடக்கும் போலீஸ்காரர் மீது டூ வீலர் மோதும் CCTV காட்சிகள் வெளியாகி உள்ளன. போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
வாசகர் கருத்து