பொது டிசம்பர் 02,2022 | 10:19 IST
சென்னை மெட்ரோ ரயில்களில் சராசரியாக தினமும் 2 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். வாட்ஸ் ஆப் மூலம் டிக்கெட் புக் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பிரத்யேக வாட்ஸ் ஆப் எண் தரப்படும். அதன் மூலம், டிக்கெட் புக் செய்து, வாட்ஸ் ஆப் பே, ஜி பே, நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்தலாம். மெட்ரோ ஸ்டேஷன் நுழைவு வாயிலில் உள்ள க்யூஆர் கோடு ஸ்கேனரில் டிக்கெட்டை காட்டி, பயணிக்கலாம்.
வாசகர் கருத்து