மாவட்ட செய்திகள் டிசம்பர் 02,2022 | 00:00 IST
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. . சிவசாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடி மரத்திற்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பஞ்ச மூர்த்திகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. விழாவில் பக்தர்கள் திராளாக கலந்து கொண்டு அம்பாளை தரிசித்தனர் விழாவின் முக்கிய நிகழ்வாக, வரும் 6ம் தேதி ஓலை சப்பரமும் 10ம் தேதி தேரோட்டமும்11ஆம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது
வாசகர் கருத்து