பொது டிசம்பர் 02,2022 | 12:21 IST
தமிழகத்தில் 37 லட்சம் ஏக்கரில் நெல், மக்காச்சோளம் போன்ற வேளாண் பயிர்கள்; 6 லட்சம் ஏக்கரில் காய்கறி உள்ளிட்ட தோட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. பருவமழை பாதிப்பில் இருந்து பயிர்களை மீட்க கூடுதல் உரம் வழங்க சொல்லி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. 90 ஆயிரம் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டது. கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரயில், லாரிகள் மூலம் வினியோகிக்கப்பட்டது. பயிரின் தேவைக்கு அதிகமாக யூரியா உரமிடுவதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும் என வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார்.
வாசகர் கருத்து