பொது டிசம்பர் 02,2022 | 13:05 IST
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற நாகநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா கொடியேற்ற உற்சவம் இன்று நடந்தது. சன்னதி மண்டபத்திலுள்ள தங்க கொடிமரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிவச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நாகநாத சாமி, கிரிகுஜாம்பால் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மங்கல இசையுடன் கொடியேற்றப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து