மாவட்ட செய்திகள் டிசம்பர் 02,2022 | 13:24 IST
வேளாங்கண்ணியில் இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக நாகை சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 15 அதிகாரிகள் நள்ளிரவு வேளாங்கண்ணி செருதூருக்கு இடையிலான வெள்ளையாற்றில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆற்றின் கரையோரம் இருந்த பைபர் படகுக்கு சென்றனர். அதிகாரிகள் வந்ததால் படகில் இருந்த 3 பேர் தப்பி ஓடினர். அவர்களை விரட்டிய அதிகாரிகள் மக்கள் உதவியுடன் பிடித்தனர். படகை சோதனை செய்தபோது, படகின் அடியிலும் ஐஸ் பெட்டியிலும் 9கஞ்சா மூட்டைகளை மறைத்து வைத்து இலங்கைக்கு கடத்தவிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வாசகர் கருத்து