மாவட்ட செய்திகள் டிசம்பர் 02,2022 | 13:50 IST
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், , 6ம் தேதி மஹா தீப திருவிழா நடக்கிறது. விழாவுக்கு, தமிழக கவர்னர் ரவி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வர உள்ளனர். பாதுகாப்பு பணிகள் குறித்து டி.ஜி.பி., சைலேந்திரபாபு 2 நாட்களாக, கோவில் வளாகம் மற்றும் கிரிவலப்பாதை மற்றும் நகரில் மக்கள் கூடும் இடங்களில் ஆய்வு செய்து வருகிறார். இன்று காலை கிரிவலப்பாதையில் ஓடி ஆய்வு செய்தார். ஒரு மணி நேரம், 52 நிமிடங்களில் கிரிவலப்பாதையின் 14 கி.மீ துாரத்தை ஓடி ஆய்வு மேற்கொண்டார்.
வாசகர் கருத்து