மாவட்ட செய்திகள் டிசம்பர் 02,2022 | 18:01 IST
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா திமுகவை சேர்ந்த மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி தலைமையில் நடந்தது. கர்ப்பிணிகளுக்கு மாலை, சந்தனம். குங்குமம் மற்றும் வளையல்களை தமிழரசி அணிவித்தார். அவர்களுடன் சேர்ந்து பல்லாங்குழி விளையாடினார். ஐந்து வகை கலவை சாதத்தை கர்ப்பிணிகளுக்கு ஊட்டி விட்டு தானும் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
வாசகர் கருத்து