சினிமா வீடியோ டிசம்பர் 02,2022 | 18:51 IST
கண்களாலும் கவர்ச்சியாலும் சினிமாவில் தடம் பதித்து கனவாய் மறைந்த கவர்ச்சித் தாரகை சில்க் ஸ்மிதா. இவரின் 62வது பிறந்தநாள் இன்று. ஆந்திராவின் ஏலூரில் 1960, டிச., 2ல் ஏழை குடும்பத்தில் விஜயலட்சுமியாக பிறந்தார். வறுமையால் நான்காம் வகுப்போடு கல்வியை கைவிட்டார். சிறுவயதில் திருமணம் செய்தார். அந்த வாழ்வும் மகிழ்ச்சி தரவில்லை. வேலை தேடி சென்னைக்கு வந்து வீட்டு வேலை செய்தார். நடிகர் வினுசக்கரவர்த்தி மூலம் வண்டிச்சக்கரம் படத்தில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து இவர் கவர்ச்சி கதாபாத்திரங்களாகவே நடித்தார். கவர்ச்சி, நடன அசைவு, கிரங்க வைக்கும் கண்களால் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தார். தென்னிந்திய, ஹிந்தி மொழிகளில் 450 படங்களில் நடித்தார். சில்க்கின் நிஜ வாழ்வில் துன்பங்களும், ஏமாற்றமும் மட்டுமே அதிகம் இருந்தது. 1996, செப்., 23ல் தனது வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு இறந்து போனார். சில்க் மறைந்து 26 ஆண்டுகளாகிவிட்டது. ஆனால் அவருக்கான இடம் மட்டும் இப்போதும் வெற்றிடமே.
வாசகர் கருத்து