மாவட்ட செய்திகள் டிசம்பர் 03,2022 | 00:00 IST
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த வானகிரி மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது விசை படகில் பாஸ்கர்,இளையராஜா, பிரபு,மாணிக்கம் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் இன்று அதிகாலை தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். பூம்புகார் துறைமுகத்திற்கு கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கடல் சீற்றம் காரணமாக படகு கடலில் மூழ்கியது. படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் குதித்து தத்தளித்தனர். சக மீனவர்கள் அவர்களை மீட்டு கரை சேர்த்தனர். மீனவர்கள் கொடுத்த தகவலின் பெரில் வானகிரி மீனவர்கள் மாற்று படகுகள் மூலம் சென்று கடலில் மூழ்கிய 20 லட்சம் மதிப்பிலான விசை படகை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாசகர் கருத்து