மாவட்ட செய்திகள் டிசம்பர் 03,2022 | 00:00 IST
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு கண்டியூர் பைபாஸ்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று, தற்போது சாலை அமைக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்து தொடர் உண்ணாவிர்த்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பா சாகுபடியில் கதிர் வரும் வேளையில் அதிகாரிகள் பயிர் மீது மண்ணை மூடி அதை அழித்து வருவது தங்களுடைய பிள்ளைகளை கொல்வதற்கு சமம் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். உடனடியாக இத்திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் இல்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்பாண்டியன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாசகர் கருத்து