பொது டிசம்பர் 03,2022 | 18:48 IST
தஞ்சை, திருவையாற்றில் வாகன நெரிசலை தவிர்க்க, கண்டியூரில் இருந்து பைபாஸ் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. 191 கோடி ரூபாய் செலவில், 7 கிலோ மீட்டருக்கு சாலை அமைக்கப்படுகிறது. 6 கிராமங்களில் உள்ள வயல் வழியாக சாலை அமைக்கப்படுகிறது. சம்பா பயிரிடப்பட்டுள்ள நிலையில் பயிர்களின் மீது மண்ணை கொட்டி அழித்து விட்டு, சாலை போடும் பணி நடப்பதாக விவசாயிகள் கொதிக்கின்றனர். கண்டியூர் அருகே ஜேசிபியை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். கண்முன்னே பயிர்களை அழிப்பதை தாங்கிக்கொள்ள முடியவில்லை சம்பா அறுவடை முடியும் வரை பை பாஸ் சாலை பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து:
மேலும் 1 கருத்துக்கள்...