பொது டிசம்பர் 03,2022 | 18:50 IST
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஸ்டாலின் நகரை சேர்ந்த குமரேசனும் ஜெகனும் நண்பர்கள். அக்டோபர் 29ம்தேதி மூக்கு முட்ட குடித்தனர். திருத்தணி கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் போதையில் வம்பு செய்தனர். ஒரு பக்தரிடம் செல்போனை பறித்து குமரேசன் போக்கு காட்டினார். பிறகு திரும்ப கொடுத்துவிட்டார். இது ஜெகனுக்கு கோபத்தை உண்டு பண்ணியது. பக்கத்தில் இருந்த பாஸ்ட்புட் கடையில் இருந்து கரண்டியை எடுத்து வந்து குமரேசனை அடித்தார். சண்டை முற்றியது. ஆத்திரம் அடங்காத ஜெகன், கடாயை எடுத்து வந்து குமரேசன் தலையில் பலமாக தாக்கினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த குமரேசனை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். சென்னைக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்பினர். அங்கு ஒரு மாதம் சிகிச்சை பெற்ற நிலையில் இறந்தார். அவருக்கு வயது 32. போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து ஜெகனை தேடுகின்றனர்.
வாசகர் கருத்து