அரசியல் டிசம்பர் 03,2022 | 22:09 IST
டில்லியில் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. பள்ளி மாணவர்களிடையே தொழில் செய்யும் மனப்பான்மையை உருவாக்கும் வகையில் புதிய திட்டத்தை அறிவித்தது. புதிய பிசினஸ் ஐடியாவுடன் வரும் 9 முதல் 12 ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இத்திட்டத்திற்காக 2021--22-ம் ஆண்டுக்கு ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, 56 கோடி ரூபாய் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது. மாணவர்களிடம் ஆர்வம் இல்லாததால், பல பள்ளிகள் அரசு கொடுத்த நிதியை அப்படியே திருப்பி கொடுத்தன. 26 கோடி ரூபாய் கஜானாவுக்கே திரும்பி விட்டது. ஆனால், இத்திட்டத்தை பிரபலப்படுத்தும் வகையில் டிவி, பத்திரிகைகளில் விளம்பரங்கள் செய்யப்பட்டன. அதற்காக, 52.52 கோடி ரூபாயை கெஜ்ரிவால் அரசு செலவழித்துள்ளது. சுய விளம்பரத்துக்காக மக்கள் பணத்தை விரயமாக்குவதை கெஜ்ரிவால் வாடிக்கையாக கொண்டிருப்பதாக, பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து: