சினிமா வீடியோ டிசம்பர் 05,2022 | 08:30 IST
1. தமிழகத்தின் தனிப்பெரும் முதல் பெண் ஆளுமை, இரும்புப் பெண்மணி ஜெயலலிதா 2. 5 முறை தமிழக முதல்வர் பதவியை அலங்கரித்த ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு நாள் இன்று... 3. நடிகையாக, அரசியல்வாதியாக, கட்சியின் தலைவியாக, முதல்வராக மக்களின் மனம் கவர்ந்தவர். 4. "புரட்சித் தலைவி", "அம்மா" என அன்போடு அழைக்கப்பட்டவர். 5. 1948, பிப்., 24ல் கர்நாடக மாநிலம், மாண்டியாவில் மேலுகோட்டே என்ற ஊரில் பிறந்தார். 6. ஜெயராம் - வேதவள்ளி தம்பதியரின் மகள் ஆவார். 7. இவரது நிஜபெயர் கோமளவள்ளி. இரண்டு வயதிலேயே தந்தையை இழந்தார். 8. பெங்களுர் "பிஷப் காட்டன்', சென்னை "சர்ச் பார்க் கான்வென்ட்" பள்ளிகளில் பயின்றார். 9. சட்டம் பயில ஆசைப்பட்டு சந்தர்ப்ப வசத்தால் நடிகையானார். 10. 1961ல் "எபிஸில்" என்ற ஆங்கில படத்தின் மூலம் ஒரு நடிகையாக அறியப்பட்டார். 11. 1964ல் "சின்னடா கொம்பே" என்ற கன்னட படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக களம் கண்டார். 12. 1965ல் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய "வெண்ணிற ஆடை" படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார் ஜெயலலிதா. 13. 100 படங்களுக்கு மேல் நடித்த ஜெயலலிதா 1980ல் அரசியலில் பயணிக்க தொடங்கினார். 14. 1980ல் எம்ஜிஆரால் அதிமுகவின் பிரச்சார செயலாளராக நியமிக்கப்பட்டார். 15. 1983ல் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக உயர்வு பெற்றார். 16. 1984ல் ராஜ்யசபா உறுப்பினர் ஆனார். பார்லிமென்ட்டில் அதிமுகவின் துணைத் தலைவராகவும் பதவி வகித்தார். 17. எம்ஜிஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டபோது 1984ல் நடந்த சட்டசபை தேர்தலில் சூறாவளி பிரச்சாரம் செய்து, அதிமுக.வின் வெற்றிக்கு வித்திட்டார். 18. எம்ஜிஆர் மறைவிற்குப் பின் 1988ல் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, ஜானகி அணி - ஜெயலலிதா அணி என இரண்டாக செயல்பட துவங்கியது 19. 1989ல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று அதிமுக.,வின் அடுத்த தலைவர் என நிரூபித்தார் 20. அரசியலிலிருந்து ஜானகி விலகிய பின் அதிமுக.,வை ஒன்றிணைத்து வீறு நடை போட்டார். எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் பெற்றார் 21. 1991ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று முதல்முறையாக முதல்வரானார். 22. 1991 - 96 காலகட்டங்களில் தான் இவர் மீது சொத்து குவிப்பு வழக்கும் தொடரப்பட்டது. 23. 1996ல் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தவர் பின் 2001, 2011 முறையே நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார். 24. 2014ம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார். 25. 2015 மே 11 அன்று சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் 26. 2016ல் நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்று 5வது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்று, எம்ஜிஆரின் அரசியல் வாரிசு என்பதை நிரூபித்தார். 27. இரும்புப் பெண்மணியாய் வாழ்ந்து காட்டிய ஜெயலலிதா 2016, டிச., 5ல் மறைந்தார். மக்களால் நான்... மக்களுக்காக நான் என்ற தாரக மந்திரத்தால் தமிழக மக்களின் மனங்களை வென்ற ஜெயலலிதா காலத்திற்கும் மக்கள் மனதில் வாழ்வார்.
வாசகர் கருத்து