மாவட்ட செய்திகள் டிசம்பர் 04,2022 | 00:00 IST
காஞ்சிபுரத்தில் இருந்து தேசூர் வழியாக செஞ்சிக்கு நாராயணமூர்த்தி என்ற தனியார் பஸ் 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. மணிகண்டன் பஸ்சை ஓட்டினார். வந்தவாசி அடுத்த திரைக்கோவில் கிராமம் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ், சாலை ஓரத்தில் இருந்த விவசாய நிலத்தில் கவிழ்ந்தது. பஸ்சில் பயணம் செய்த 30 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தேசூர் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் மக்கள் உதவியுடன் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
வாசகர் கருத்து