மாவட்ட செய்திகள் டிசம்பர் 04,2022 | 19:19 IST
அண்ணா பல்கலைக்குட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி அண்ணா பல்கலை கோவை வளாகம் மற்றும் ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி மைதானங்களில் நடக்கிறது. முதலில் பேட்டிங் செய்த சி.எஸ்.ஐ., கல்லுாரி அணி, 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கே.ஜி., கல்லுாரியின் துவக்க வீரர்கள் அபாரமாக விளையாட, அணி, 13.1 ஓவரில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 121 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இதேபோல் மற்றொரு போட்டியில், பி.பி.ஜி., கல்லுாரி அணி முதலில் பேட்டிங் செய்து, 90 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி அணி, 10.2 ஓவரில் ஒரு விக்கெட் இழந்து 91 ரன் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.
வாசகர் கருத்து