மாவட்ட செய்திகள் டிசம்பர் 05,2022 | 11:40 IST
திருச்சி மாவட்டம், மண்ணச்ச நல்லூர் தாலுகா, நொச்சியம் கிராமத்தில் அருள்மிகு பாலம்பிகை சமேத சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. சைவம் வளர்த்த நால்வர் என அழைக்கப்பட்ட சுந்தரர், நாவுக்கரசரால் பாடல் பெற்ற இந்தக் கோயிலின் மஹா கும்பாபிஷேகம் இன்று நடந்தது. டிசம்பர் 2ம் தேதி விநாயக வழிபாடு, யாக சாலை பிரவேசம் முதலானவை நடந்தன. சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து