மாவட்ட செய்திகள் டிசம்பர் 05,2022 | 11:42 IST
சென்னை, ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் அமல்ராஜ். மத்திய அரசு ஊழியர். ஞாயிற்றுக்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு, துணி எடுக்க குடும்பத்துடன் கடைக்குச் சென்றார். திரும்பிவந்து பார்த்தபோது, கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த 15 பவுன் நகையைக் காணவில்லை. ஆவடி போலீசார், கை ரேகைகளைப் பதிவு செய்து, விசாரணை நடத்துகின்றனர். திருட்டு நடந்த காமராஜர் நகரில்தான் அமைச்சர் நாசர் வீடும் உள்ளது. அமைச்சர் குடியிருப்புப் பகுதியில் கொள்ளை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து