மாவட்ட செய்திகள் டிசம்பர் 05,2022 | 11:58 IST
வைகை அணை நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து 1510 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் முழு கொள்ளளவு 71 அடியாகும். இப்போது நீர் மட்டம் 65.23 அடியாக உள்ளது. 15 நாளுக்கு பிறகு மீண்டும் மழை பெய்ததால், நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது. இதனால், அணையில் இருந்து விநாடிக்கு 1519 கன அடி நீர் திறக்கப்படுகிறது
வாசகர் கருத்து