மாவட்ட செய்திகள் டிசம்பர் 05,2022 | 12:29 IST
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள சேக்தாவூது ஆண்டவர் தர்காபுகழ்பெற்றது. இதுஅனைத்து சமுதாயத்தினரும் வந்து செல்லும் ஒரு மத ஒற்றுமைக்கு எடுத்து காட்டான தர்காவாகும். இங்கு கந்தூரி விழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டின் 721-வது கந்தூரி விழா சென்ற மாதம் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று அதிகாலை புனித சந்தன கூடு ஊர்வலம் நடைபெற்றது. சந்தனம் நிரப்பிய குடங்களை தர்காவிற்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி சிறப்பு பிராத்தனையுடன் நடைப்பெற்றது.
வாசகர் கருத்து