மாவட்ட செய்திகள் டிசம்பர் 05,2022 | 12:58 IST
மதுரை மதிச்சியம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்ற வாலிபர். சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடுவது போன்று பட்டா கத்தியுடன் வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்ததார், அது வலைதளத்தில் பரவியது. இதனையடுத்து மதுரை போலீஸ் ஆணையர் செந்தில்குமார் உத்தரவுப்படி தனிப்படை போலீசார் மதுரை ஒத்தக்கடை பகுதியில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த அஜித் குமாரை கைது செய்தனர். தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
வாசகர் கருத்து