சம்பவம் டிசம்பர் 05,2022 | 00:00 IST
மதுரை மதிச்சியத்தை சேர்ந்தவர் அஜீத்குமார் வயது 24. கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் போட்டார். இது மக்களை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக போலீஸ் கமிஷனர் செந்தில்குமாருக்கு புகார்கள் பறந்தன. விஷயத்தை கேள்விப்பட்டதும் அஜித்குமார் தலைமறைவானார். ஒத்தக்கடையில் பதுங்கி இருந்த அஜீத்தை போலீசார் கைது செய்தது. ஏற்கனவே அஜீத் மீது கொலை முயற்சி, வழிப்பறி என மதுரையில் மட்டும் 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
வாசகர் கருத்து