பொது டிசம்பர் 05,2022 | 00:00 IST
மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் மலையில் மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டுமென இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. கோர்ட் அனுமதி தந்தும், அதனை செயல்படுத்த அறநிலையத்துறை மறுக்கிறது. இதனை கண்டித்து இந்து முன்னணியினர் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மலைஉச்சியில் தீபம் ஏற்றக்கோரி காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில் 300 பேர் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து