மாவட்ட செய்திகள் டிசம்பர் 06,2022 | 12:06 IST
மயிலாடுதுறையை அடுத்த பட்டவர்த்தி பகுதியில் அம்பேத்கர் படத்திற்கு மரியாதை செய்வது தொடர்பாக இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இரு பிரிவினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்நிலையில் இன்று அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி மீண்டும் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் கோட்டாட்சியர் யுரேகா 5 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். அப்பகுதியை சுற்றி சோதனை சாவடிகள் அமைத்தும், 21 இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
வாசகர் கருத்து