மாவட்ட செய்திகள் டிசம்பர் 06,2022 | 00:00 IST
சென்னையை அடுத்த அம்பத்தூர் காமராஜ் அரசு மேல்நிலைப் பள்ளியின், ஐம்பதாம் ஆண்டினைப், பொன் விழாவாக கொண்டாடினர். அமைச்சர் அன்பில் மகேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். பொன்விழா மலரை வெளியிட்டு அமைச்சர் பேசினார். ஆசிரியர்களின் கண்டிப்பை, மாணவர்கள் மீதான அக்கறையாக பார்க்கவேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வியை மற்றவர்களுடன் ஒப்பிட கூடாது. வகுப்பறைகளை தாண்டியும் கல்வி உள்ளது என அமைச்சர் கூறினார். முடிவில், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
வாசகர் கருத்து