சிறப்பு தொகுப்புகள் டிசம்பர் 06,2022 | 14:01 IST
ம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் மணிமேகலையை கண்டால் பாம்புகள் பயந்து தலை தெறிக்க சிதறி ஓடுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கொடிய விஷம் கொண்ட பாம்புகளை வெறும் கைகளால் பிடித்து காட்டிற்குள் விட்டு வருகிறார் 'சினேக்' மணிமேகலை. 18 வயதில் துவங்கிய பாம்பு பிடிக்கும் பழக்கம் பிரதான தொழிலாகவே மாறியது. அவர், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே மருதங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்த புஷ்பநாதன் - சிலம்பாயி தம்பதியின் கடைசி மகள் மணிமேகலை, வயது 38. இவருக்கு 2 அண்ணன், ஒரு அக்கா உள்ளனர். ஊருக்கு வெளியே வயல் வெளியில் வீடு கட்டி மணிமேகலை தனியாக வசித்து வருகிறார். வயல்காடு என்பதால் பாம்புகள், தவளைகளுக்கு பஞ்சமில்லை. மழைக்காலங்களில் வீட்டிற்குள் கும்பலாக புகுந்து விடும்.
வாசகர் கருத்து