மாவட்ட செய்திகள் டிசம்பர் 06,2022 | 00:00 IST
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் முதல்வராக பால் கிரேஸி உள்ளார். பல்வேறு காரணங்களுக்காக சஸ்பெண்டு செய்யப்பட்டார். கோர்ட்டில் இடைக்கால தடை பெற்று மீண்டும் பணியில் சேர்ந்தார். இந்நிலையில் வணிகவியல் துறை மாணவிகளுக்கு இண்டன்ஷிப் தொடர்பாக கையெழுத்து பெற சென்ற பேராசிரியரை மாணவிகள் முன்பு தரக்குறைவாக பேசி உள்ளார். இதையடுத்து கல்லூரி நுழைவாயில் முன்பு கல்லூரி முதல்வர் பால் கிரேஸியை மாற்றக்கோரி 100க்கும் மேற்பட்ட மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வாசகர் கருத்து