மாவட்ட செய்திகள் டிசம்பர் 06,2022 | 15:38 IST
அம்பேத்கரின் 66 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மறியல் என்ற இடத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பாஜகவினர் வந்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் தேசிய முன்னேற்ற கழகம், ஆதித்தமிழர் பாதுகாப்பு பேரவை உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகள், பாஜகவினர் மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர். போலீசார்பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை . பாஜகவினர் சிலைக்கு மாலை அணிவிக்க போலீஸ் தடையை மீறி சென்றனர். இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டது . போலீசார் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் மாவட்ட தலைவர் ஜெய் சதீஷ் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் தொண்டர்களை கைது செய்தனர். எஸ்பி ரவளிப்பிரியா அங்கு நின்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பிர அமைப்பினரை கைது செய்தார் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது போக்குவரத்து பாதிப்பால் மக்கள் பாதிக்கப்பட்டனர்
வாசகர் கருத்து