மாவட்ட செய்திகள் டிசம்பர் 06,2022 | 18:08 IST
கோவை மாவட்டம் வால்பாறை புது தோட்டம் எஸ்டேட் பகுதியில் பனிரெண்டாவது தேயிலை தோட்டத்தில் தேயிலை பறிக்கும் வேலையில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். ஊழியர் முத்துக்குமார் என்பவர் தேயிலை தோட்டத்தில் நடந்து சென்றார். பதுங்கி இருந்த கரடி ஒன்று இவரை தாக்கி கையில், காலில், முதுகில் நகத்தால் கீறியது. படுகாயம் அடைந்தவரை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
வாசகர் கருத்து