மாவட்ட செய்திகள் டிசம்பர் 06,2022 | 18:27 IST
திருப்பூரில் தொடர் மழையால் உடுமலை அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயல்களில் மழை நீர் சூழ்ந்தது. கதிர் முற்றி அறுவைடைக்கு தயாராக இருந்த நெற் கதிர்கள் வயல்களில் சாய்ந்தன. 500 க்கும் மேற்பட்ட ஏக்கரில் மழை நீர் வடிய வழியில்லாமல் வயலில் அப்படியே தேங்கி நிற்கிறது. பல நாட்களாக தண்ணீர் மூழ்கியதால் நெல் கதிர்கள் அழுகும் நிலையில் உள்ளது. பாசன கால்வாய்களை பொதுப்பணித்துறை துார் வாராமல் விட்டதால் வயல்களில் மழை நீர் தேங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
வாசகர் கருத்து