மாவட்ட செய்திகள் டிசம்பர் 06,2022 | 20:06 IST
கோவை மாவட்டம் பன்னிமடை கதிர்நாயக்கன் பாளையத்தில், ஒருவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். கட்டுமான தொழிலாளர்கள் அங்கேயே தகர கொட்டகை அமைத்து வேலை செய்தனர். இந்நிலையில் அதிகாலை ஒரு குட்டியானை உட்பட மொத்தம் 4 யானைகள் அங்கு நுழைந்தன. அங்கிருந்த பொருட்களை எல்லாம் துாக்கி எரிந்தன. சத்தம் கேட்டு, தொழிலாளர்கள் எட்டி பார்த்தபோது வெளியில் மலைபோல் யானைக் கூட்டம் நிற்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.
வாசகர் கருத்து