மாவட்ட செய்திகள் டிசம்பர் 07,2022 | 17:23 IST
சென்னை ஆவடியை அடுத்த மேட்டுப்பாளையம் பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் விஜயா. நேற்று இரவு அதே தெருவில் உள்ள மகள் வீட்டில் தூங்கிவிட்டு, காலை அவர் வீட்டுக்கு வந்தார். பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே 3 சவரன் நகை திருடுபோனது தெரிந்தது. இதே போல, அந்தப் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் வீட்டிலும் பூட்டை உடைத்து 17 பவுன் நகைகையைத் திருடிச்சென்றுள்ளனர். ஆவடி பகுதியில் இன்னொரு வீட்டிலும் நுழைந்த திருடர்கள் எதுவும் கிடைக்காமல் திரும்பிச் சென்றுள்ளனர். போலீசார் மூன்று வீடுகளுக்குள்ளும் சென்ற திருடர்களை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து