பொது டிசம்பர் 07,2022 | 18:07 IST
ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து ராயகடாவுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. துவ்வாடா ரயில் நிலையத்தில் பயணிகள் சிலர் இறங்கினர். ரயிலில் ஏற முயன்ற கல்லூரி மாணவி ஒருவர், கால் வழுக்கி விழுந்ததில், பிளாட்பாரத்துக்கும், ரயில் பெட்டிக்கும் இடையே சிக்கி கொண்டார். வெளியே வர முடியவில்லை. மாணவி வலியால் துடித்தார். புறப்பட இருந்த ரயிலை அங்கிருந்தவர்கள் நிறுத்தினர். ரயில்வே போலீசாரும் ஊழியர்களும் மீட்பு பணியில் இறங்கினர். ஒன்றரை மணி நேரம் போராடி பிளாட்பார்மை உடைத்து மாணவியை மீட்டனர். மருத்துவமனையில் சேர்த்தனர்.
வாசகர் கருத்து (5) வரிசைப்படுத்து:
மேலும் 4 கருத்துக்கள்...