மாவட்ட செய்திகள் டிசம்பர் 07,2022 | 19:25 IST
இந்து முஸ்லிம் இணைந்து கொண்டாடும் தீபதிருவிழா... திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகாவில் உள்ளது கானூர் கிராமம். இங்குள்ள "ஹஜ்ரத் முஹம்மத் ஷா வலியுல்லா தர்கா"வில் கார்த்திகை தீபத் திருநாளையொட்டி விளக்கு வைத்து வழிபாடு நடந்தது. மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக விளங்குகிறது கானூர் தர்கா. நுாற்றாண்டு புகழ் வாய்ந்த தர்காவில் ஹிந்து மற்றும் இஸ்லாமிய மக்கள் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் வழிபாடு நடத்தி வருகின்றனர். தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தர்காவில் தீப வழிபாடு நடக்க உள்ளது.
வாசகர் கருத்து