மாவட்ட செய்திகள் டிசம்பர் 07,2022 | 00:00 IST
கோவை நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள 'ஆபிசர்ஸ் கிளப்' மைதானத்தில் வருவாய் மாவட்ட அளவிலான ஸ்குவாஷ் போட்டி நடந்தது. 14 வயது ஒற்றையர் பிரிவில், ஸ்டேன்ஸ் பள்ளியின் கிளாட்வின் ஜோஸ் முதலிடத்தையும், எஸ்.எஸ்.வி.எம்., பள்ளியின் தீபேஷ் இரண்டாமிடமும் பிடித்தனர். 17 வயது ஒற்றையர் பிரிவில், அபாரமாக ஆடிய ஆலங்கொம்பு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் சுதர்சன் முதலிடமும், விவேகம் பள்ளி மாணவர் தர்சன் இரண்டாமிடமும் பிடித்தனர். இரட்டையர் பிரிவில், விவேகம் பள்ளி அணி தர்சன், விஜய் கார்த்திக் ஜோடி முதலிடத்தையும், ஆலங்கொம்பு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சுதர்சன் மற்றும் மதன்சஞ்சய் இரண்டாமிடமும் பிடித்தனர்.
வாசகர் கருத்து