அரசியல் டிசம்பர் 07,2022 | 19:44 IST
சிபிஐ வழக்குகள் தொடர்பாக லோக்சபாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி மாலா ராய் கேள்வி எழுப்பினார். மத்திய அமைச்சர் ஜித்தேந்தர்சிங் பதிலளித்தார். கடந்த 5 ஆண்டுகளில், பாஜ, காங்கிரஸ், அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, சமாஜ்வாடி, ஆர்ஜேடி உட்பட 11 கட்சிகளை சேர்ந்த எம்பி, எம்எல்ஏக்கள் மீது சிபிஐ 56 வழக்குகள் பதிந்துள்ளது. 22 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஆந்திராவில் 10 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அடுத்ததாக, கேரளா, உத்தரப்பிரதேசத்தில் தலா 6, மேற்கு வங்கம், அருணாச்சல பிரதேசத்தில் தலா 5, தமிழகத்தில் 4 வழக்குகளை எம்பி, எம்எல்ஏ மீது சிபிஐ பதிவு செய்துள்ளது. மணிப்பூர், டில்லி, காஷ்மீர், கர்நாடகா, ஹரியானா, சத்தீஸ்கர், உத்தராகண்ட், மகாராஷ்டிராவிலும் வழக்கு போட்டுள்ளது.
வாசகர் கருத்து