பொது டிசம்பர் 08,2022 | 11:03 IST
அமித் மால்வியா நம்பிக்கை டில்லி மாநகராட்சி தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றிபெற்றது. மொத்தமுள்ள 250 வார்டுகளில் 134 வார்டுகளில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றது. பாஜக 104 வார்டுகளிலும், காங்கிரஸ் 9 வார்டுகளிலும் சுயேச்சைகள் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். 15 ஆண்டாக பாஜகவசம் இருந்த டில்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றியது. “டில்லியை நாட்டின் சிறந்த மாநகராட்சியாக உருவாக்க மத்திய அரசு உதவ வேண்டும். அதற்கு பிரதமர் மோடியின் ஆசி வேண்டும்” என ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்தார்.
வாசகர் கருத்து