பொது டிசம்பர் 08,2022 | 12:03 IST
குஜராத் தேர்தலில் கிட்டத்தட்ட 150 தொகுதிகளில் பாஜ முன்னிலை வகிக்கிறது. முன்பு எப்போதும் இல்லாத வெற்றியை இந்த முறை பெறும் வாய்ப்பு உள்ளது. இதற்கு மோடியே காரணம் என மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். "குஜராத்தில் பாஜ புதிய வரலாறை எழுதுகிறது. பிரதமர் மோடி மீது அம்மாநில மக்கள் வைத்திருக்கும் அசாத்திய நம்பிக்கையால் தான் இந்த சாதனை சாத்தியமானது" என்றார். 2000ல் இருந்தே குஜராத் மாடலை மக்கள் அங்கீகரித்து வருகின்றனர். இந்த மாடல் தேசிய அளவில் ஏற்கபட்டுள்ளது என பார்லிமென்ட் விவகார அமைச்சர் வெங்கடேஷ் ஜோஷி கூறினார்.
வாசகர் கருத்து