மாவட்ட செய்திகள் டிசம்பர் 08,2022 | 12:37 IST
கார்த்திகை தீபத் திருநாளையொட்டி அவினாசி கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் லட்சத்து எட்டு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் தொடங்கி வைத்தார். சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான சிவனடியார்கள், பக்தர்கள், தன்னார்வலர்கள் 1000 கும் மேற்பட்டோர் லட்சத்து எட்டு தீபங்கள் ஏற்றினர். கோயில் முன்புறம் 100 அடியில் அமைக்கப்பட்ட தீப ஸ்தம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து