பொது டிசம்பர் 08,2022 | 13:20 IST
இமாச்சல் தேர்தலில் பாஜக சிஎம் ஜெய்ராம் தாகூர் சாதனை வெற்றி இமாச்சலப்பிரதேசத்தில் பாஜவை விட காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. இன்னொரு புறம், பாஜக முதல்வர் ஜெய்ராம் தாகூர் தொடர்ந்து 6வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். 57 வயதான அவர் மாண்டியா மாவட்டம் சிராஜ் தொகுதியில் போட்டியிட்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சேத்ராமை வீழ்த்தினார். 20 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் இந்த வெற்றியை பெற்றார். 1993 முதல் தாகூர் தான் சிராஜ் எம்எல்ஏவாக இருக்கிறார். இன்னும் 5 ஆண்டுகளை அந்த தொகுதி மக்கள் வழங்கியுள்ளனர்.
வாசகர் கருத்து